Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றம் நோக்கி சமூக ஆர்வலர்கள் பேரணி
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றம் நோக்கி சமூக ஆர்வலர்கள் பேரணி

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 'கார்ப்பரேட் மாஃபியா' முறைகேடுகள் குறித்து விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர்.

'செக்ரெட்டேரியட் #ஆர்.சி.ஐ.நவ்' அமைப்பின் கீழ் திரண்ட போராட்டக்காரர்கள், கோலாலம்பூர் தாமான் துகு பகுதியிலிருந்து நாடாளுமன்ற நுழைவாயில் வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்று தங்களின் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். இந்த அமைப்பிற்கு 'பெர்சே' உள்ளிட்ட பல முன்னணி அரசு சாரா இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 'புளூம்பெர்க்' ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றில், சில தொழிலதிபர்களும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் அதிகாரிகளும் இணைந்து, நிறுவனங்களின் பங்குகளை மலிவான விலைக்கு வாங்குவதற்காகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டுகளை எஸ்.பி.ஆர்.எம் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி முற்றிலும் மறுத்துள்ள போதிலும், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. .

Related News