நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நாட்டின் தற்போதைய அரசியல் நிலப்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று பாரிசான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் இயக்கவியல் மாறியுள்ளதால் பழைய சிந்தனைகளுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு மற்றும் சபா போன்ற மாநிலங்களின் தற்போதைய அரசியல் சூழல்களே இதற்குச் சிறந்த உதாரணங்கள் என்றார்.
சிம்பாங் ஜெராம் மற்றும் புக்கிட் நானிங் தொகுதிகளில் பாரிசோன் நேஷனல் வேட்பாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ஜோகூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கப் பொதுமக்கள் தொடர்ந்து பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.








