Oct 16, 2026
Thisaigal NewsYouTube

குறைந்த சம்பள விகிதத்தை இடத்திற்கு ஏற்றவாறு அமல்படுத்துவீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குறைந்த சம்பள விகிதத்தை இடத்திற்கு ஏற்றவாறு அமல்படுத்துவீர்

கோலாலம்பூர், டிச.4-


அடுத்த ஆண்டு முற்பகுதியில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய குறைந்த சம்பள விகிதம், இடத்திற்கு ஏற்றவாறு அமல்படுத்துமாறு செனட்டர் ஒருவர், அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டு இருப்பதைவிட அனைத்து இடங்களில் ஒரே மாதிரியான குறைந்த சம்பள விகிதத்தை அமல்படுத்துவதைவிடுத்து இந்தோனேசியாவில் அமல்படுத்தப்படுவதைப் போல மலேசியாவிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று செனட்டர் சுராய்னா மூசா கேட்டுக்கொண்டார்.

1,700 ரிங்கிட் புதிய குறைந்த சம்பள விகிதம் என்பது, கோலாலம்பூர் போன்ற மாநகரங்களுக்கு பொருந்தி வராமல் இருக்கலாம், காரணம் வாழ்க்கைச் செலவினம் மிக உயர்வாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று புற நகர் பகுதிகளில் இந்த 1,700 ரிங்கிட் சம்பள விகிதம் பெரியதாக இருக்கலாம். காரணம், அப்பகுதிகளில் வாழ்க்கை செலவினம் மிக குறைவாக இருக்கலாம்..

எனவே மக்களின் வாழ்விடங்களைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கைச் செலவினத்தை கருத்தில் பதித்து, இந்த குறைந்த சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று செனட்டர் சுராய்னா மூசா கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →