Sep 26, 2026
Thisaigal NewsYouTube
7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

Share:

கடந்த ஏப்ரல் மாதத்தில் 7,000-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், மாற்று வேலைகளை வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கைகளை அரசு விரைவில் அறிவிக்கவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரலில் வேலைவாய்ப்பு இழப்பு 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க, அண்மையில் புதிய முதலீடுகளைப் பெற்றுள்ள பினாங்கு, பேராக், சிலாங்கூர், ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடிக் கொள்ளலாம் எனப் பிரதமர் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் பயிற்சி அளித்து வேலை வழங்க அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

Related News