Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக வேட்டையில் சிக்கிய 'கெங் ரமேஷ்' தலைவன் இந்தியாவில் அதிரடி கைது
தற்போதைய செய்திகள்

அனைத்துலக வேட்டையில் சிக்கிய 'கெங் ரமேஷ்' தலைவன் இந்தியாவில் அதிரடி கைது

Share:

கெடா, சுங்கை பட்டாணி பகுதியில் பல்வேறு பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு வந்த "கெங் ரமேஷ்" என்ற ஆபத்தான திட்டமிட்ட குற்ற கும்பலின் தலைவனை அரச மலேசிய போலீஸ் படை வெற்றிகரமாக கைது செய்துள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த மே 22ஆம் தேதி, தாய்லாந்து மற்றும் இந்திய நாட்டு போலீஸ் அதிகாரிகளின் ரகசிய ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட "ஒப் தீகா" என்ற அதிரடி வேட்டையின் மூலம் இந்த கைது நடவடிக்கை சாத்தியமானது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் இந்த முக்கிய குற்றவாளி மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் உடனடியாக மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டார் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

சுங்கை பட்டாணி நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் மற்றும் இன்டர்போலின் 'சிவப்பு நோட்டீஸ்' ஆகியவற்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா, பாடாங் செராய் மற்றும் பீடோங் ஆகிய இடங்களில் நடந்த இரண்டு தனித்தனி கொடூர கொலை வழக்குகள் தொடர்பாகவும் இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிக ஆபத்தான் இந்த குற்றவாளியை பிடிக்க உதவிய இந்திய மற்றும் தாய்லாந்து அரசுக்கு மலேசிய போலீஸ் துறை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்வதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

அனைத்துலக வேட்டையில் சிக்கிய 'கெங் ரமேஷ்' தலைவன் இந்தியாவ... | Thisaigal News