Sep 26, 2026
Thisaigal NewsYouTube
எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
தற்போதைய செய்திகள்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Share:

தியாகப் பெருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் என்பது வெறும் அடையாள வழிபாடு மட்டுமல்ல, அது அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் தியாகத்தின் உன்னத செய்தியைக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில் நபிகளின் தியாகங்களை முன்மாதிரியாகக் கொண்டு முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரம், கல்வி மற்றும் சமயம் என அனைத்துத் துறைகளிலும் நாம் இன்று செய்யும் தியாகங்களே, தேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக அமையும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தியாகங்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது எனக் கூறிய அவர், ஹஜ் யாத்திரை மனிதர்களுக்கு எளிமையையும் பணிவையும் கற்றுக்கொடுக்கிறது என்றும் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அ... | Thisaigal News