Jun 12, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

Share:

நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் ஜைனுடினின் மனைவி நாயிமா காலித், மற்றும் அவரது இரு மகன்களும் இன்னும் மலேசியாவிற்குத் திரும்பவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குடிநுழைவுத்துறை பதிவுகளின்படி அவர்கள் மூவரும் வெளிநாட்டிலேயே இருப்பது தெரியவந்துள்ளது. சதித்திட்டம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இதுவரை 17 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று சி.ஐ.டி. இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

முன்னதாக, எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் நைமாவின் மகன்களான அமீர் மற்றும் அமீனுக்கு எதிராகக் கடந்த மாதம் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News