தமது முக அழகை மெருகூட்டிக்கொள்வதற்காக அழகு ஒப்பனை நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்ற மாது ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தது தொடர்பில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஜோகூர், இஸ்கன்டார் புத்திரி, முடியர ரினி யில் உள்ள ஓர் ஒப்பனை நிலையத்தில் சிகிச்சைப்பெற்றப் பின்னர், வீடு திரும்பிய மாது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் நேற்று மதியம் 12.31 மணியளவில் புகார் பெற்று இருப்பதாக இஸ்கன்டார் புத்திரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மான் ஆரிஃபின் தெரிவித்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான அந்த மாது தனது முகத்தையும், மேனியையும் மிளிரச் செய்வதற்காக சிகிச்சை செய்து கொண்ட அந்த ஒப்பனை நிலையம் சட்டப்பூர்வமானதா? அதன் பணியாளர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதேவேளையில் சமூக வலைத்தளங்களில் வெறும் விளம்பரத்தைப் பார்த்து. அது போன்ற ஒப்பனை நிலையங்களில் சிகிச்சை பெறுவதை விட அந்த ஒப்பனை நிலையங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றவையா? என்பது குறித்து உறுதி செய்து கொள்ளுமாறு பெண்களுக்கு ஜோகூர் மாநில சுகாதார மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


