Oct 30, 2026
Thisaigal NewsYouTube

தைப்பிங் சிறை கலவரத்தில் கைதி மரணம்: சிசிடிவி காட்சிகளைக் கோரி குடும்பத்தினர் அப்பீல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தைப்பிங் சிறை கலவரத்தில் கைதி மரணம்: சிசிடிவி காட்சிகளைக் கோரி குடும்பத்தினர் அப்பீல்

கடந்த 2025 -ஆம் ஆண்டு, ஜனவரி 17-ஆம் தேதி தைப்பிங் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த கான் சின் எங் என்ற கைதி உயிரிழந்தார்.

இந்த கலவரத்தில் சுமார் 100 கைதிகள் மீது 60 சிறைக் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், உயிரிழந்த கைதியின் குடும்பத்தினர் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கோரி தாக்கல் செய்த மனுவை தைப்பிங் உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் நீதிமன்ற முடிவை எதிர்த்து அப்பீல் செய்துள்ளனர்.

இவ்வழக்கில் முக்கியமான சிசிடிவி பதிவுகள் போலீசாரின் விசாரணையில் இருப்பதாகவும், அவை அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கைதி மரணம் தொடர்பாக ஒரு சிறைக் காவலர் மீதும், மூன்று கைதிகளைத் தாக்கியதாக மேலும் ஐந்து சிறைக் காவலர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சிகளைப் பெறுவதற்கான மேல்முறையீட்டு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →