Oct 30, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி விடுமுறை: இந்து அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க செனட்டர் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி விடுமுறை: இந்து அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க செனட்டர் கோரிக்கை

வரும் நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்து சமயத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கான பதிவு செய்யப்படாத விடுப்பை தீபாவளிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இந்து அரசாங்க ஊழியர்களுக்கு தீபாவளியையொட்டி கூடுதல் விடுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. 2024-ஆம் ஆண்டு முதல் தீபாவளிக்கு முந்தைய நாள் அல்லது அடுத்த நாள் என தங்களது விருப்பப்படி அந்த விடுப்பைப் அவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், திங்கட்கிழமை ஏற்கெனவே பொது விடுமுறையாக உள்ளது.

இதனால் கூடுதல் விடுப்பைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகின்றது.

எனவே, இந்து அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு வழங்கி, செவ்வாய்க்கிழமை விடுப்பைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு பொதுச் சேவைத் துறையான ஜேபிஏவிற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வந்த போது, இதேபோன்ற சிறப்பு அனுமதியை அரசாங்கம் வழங்கி, செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுக்க அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →