Oct 30, 2026
Thisaigal NewsYouTube

மொரீஷியஸில் கஞ்சாவுடன் மலேசிய சமையல் கலைஞர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மொரீஷியஸில் கஞ்சாவுடன் மலேசிய சமையல் கலைஞர் கைது

மொரீஷியஸில் 17.88 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்தியதாக, சுமார் 2.18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் மலேசிய சமையல் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து வந்த அவரை, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அதிகாரிகள் கைது செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் அவரிடமிருந்து கைப்பேசி, 8,150 மொரீஷியஸ் ரூபாய் ரொக்கம் மற்றும் மலேசிய, தாய்லாந்து நாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து வந்த 76 வயது மலேசியர் ஒருவரும் அதே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து 6.18 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு7 லட்சத்து 93 ஆயிரம் ரிங்கிட் ஆகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →