Oct 30, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: 74 வயது முதியவர் உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: 74 வயது முதியவர் உயிரிழப்பு

நெகிரி செம்பிலான், ரெம்பாவ் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளத்தில் பெரோடுவா மைவி கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதனை ஓட்டிச் சென்ற 74 வயது முதியவர் உயிரிழந்தார்.

சுங்கை கம்போங், குண்டுர் உலு ஆற்றுக்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ள சாலையில் பயணித்த போது, அவரது கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பாக, இரவு 9.20 மணியளவில் உயிரிழந்தவரின் மகனிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததாக ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத்தின் மூத்த செயல்பாட்டுத் தளபதி கைருல் யஹாயா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தெலுக் கெமாங் தீயணைப்பு நிலையத்தின் நீர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காருக்குள் சிக்கியிருந்த முதியவர் மீட்கப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்துவிட்டதைச் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவரது உடல் ரெம்பாவ் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →