கெடா மாநிலத்தில் முதன் முறையாக, ஆற்றில் நடைபெறும் உலகத் தரத்திலான அதிவேகப் படகுப் பந்தயம், நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை சுங்கை கெடாவில் நடைபெறவுள்ளது.
ஆம்பாங் ஜாஜாரில் உள்ள மாடா தலைமையகத்திற்கு அருகே நடைபெறும் இப்போட்டியில், மலேசியா உட்பட இத்தாலி, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அணிகளும் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கெடா மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவோர் குழுத் தலைவர் டத்தோ முகமது சாலே சைடின் தெரிவித்தார்.
இந்தப் போட்டி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என மலேசிய அதிவேகப் படகுப் பந்தயத் தலைவர் எஸ்ஸாட் முகமது தாஹிர் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியைக் காண பொதுமக்கள் திரளாக வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.








