ஒற்றுமையை வளர்க்கும் இடமாக அரண்மனை இருக்க வேண்டுமே தவிர, வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தும் களமாக மாறக்கூடாது என்று பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா வலியுறுத்தியுள்ளார்.
பேராக் மாநில மன்ற உறுப்பினர்களும் அரண்மனைப் பிரமுகர்களும் மோதல்கள், செல்வாக்குக்கான போட்டிகள், குழு வாதம் ஆகியவற்றைத் தவிர்த்து மாநிலத்தின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், நேர்மையான பேச்சுவார்த்தை, நாகரிகமான அணுகுமுறை, கலந்தாலோசனை ஆகியவற்றின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், தனிப்பட்ட விருப்பங்களைவிட மாநிலத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இஸ்தானா இஸ்கந்தாரியாவில் இன்று நடைபெற்ற 175ஆவது பேராக் மாநில மன்றக் கூட்டத்தில் உரையாற்றியபோது சுல்தான் இதனைத் தெரிவித்தார்.








