இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மலேசியக் குடும்பம், பிசா நகரில் உணவருந்துவதற்காக காரை நிறுத்தியபோது, அதிலிருந்த 11 பயணப் பைகள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து திரேட்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பதிவின்படி, பிசாவிலிருந்து மிலான் நகருக்குச் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் இந்தத் திருட்டால் பாதிக்கப்பட்டனர். காணாமல் போன தங்களது ஐபேட் கருவியின் இருப்பிடத்தைத் தேடியபோது, அது ஒரு முகாமுக்கு அருகிலுள்ள பகுதியில் இருப்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பூட்டிய காரில்கூட பயணப் பைகளை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், தேவையற்ற இடங்களில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இணையவாசிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








