நம்பிக்கை மற்றும் நிதி வழங்கல் ஒப்பந்தமான சிஎஸ்ெ மூலம் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் செயல்படுத்துவதிலும் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஒப்பந்தத்திற்கு முன்னுதாரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு உண்மையான பலன்கள் கிடைப்பதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். குறிப்பாக, தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெறுவதில் நியாயமான வாய்ப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளையில், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவு, நேர்மறையான நிறுவனச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான தெளிவான உறுதிப்பாட்டுடனும், அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடனும் அமைய வேண்டும் என்றும் தியோ நீ சிங் தெரிவித்தார்.








