Oct 29, 2026
Thisaigal NewsYouTube

தூஜு செயலியைப் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தூஜு செயலியைப் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

நாட்டின் உள்ளூர் வழிகாட்டிச் செயலியான தூஜு, அதிகரிக்கும் பயனாளர்களைக் கையாள்வதில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்வதால், அதைப் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.

1.7 மில்லியன் அரசு ஊழியர்களை தூஜு செயலிக்கு மாறுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்தச் செயலி தற்போது அதற்குத் தயாராக இல்லை என்று லிம் கூறினார்.

தூஜு செயலி, வேஸ் செயலிக்குப் போட்டியாக உருவாக்கப்படவில்லை என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் ஹஸ்னி முஹமட் தெரிவித்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில், தூஜு செயலியில் நிகழ்நேரப் போக்குவரத்துத் தகவல்கள் கிடைக்காதது, வழிகாட்டுதலில் நம்பகத்தன்மையின்மை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகப் பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். செயலியின் செயல்பாடுகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேம்படுத்துவதாக அதன் உருவாக்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →