2027ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 15 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான பயண இருக்கைகளை வழங்க மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி திட்டமிட்டுள்ளது.
இதற்கான மின்சார ரயிலான இடிஎஸ், கிழக்குக்கரையோர மாநிலங்களுக்கான விரைவு ரயிலான ஆர்டி சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாகத் தொடங்கும் என்று கேடிஎம்பி, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பயண இருக்கைகளின் எண்ணிக்கை 39 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டு இடிஎஸ் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதுடன், திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 50 சேவைகளும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 58 சேவைகளும் இயக்கப்படும்.
இதற்கிடையில், ஜனவரி முதல் சில நீண்டதூரப் பயணங்களுக்கு கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் ரயில் மாறிச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கான ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முன்பதிவு முறையை டிசம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த கேடிஎம்பி திட்டமிட்டுள்ளது.
பயணிகள் கிட்ஸ் ஸ்டையில் செயலி அல்லது கேடிஎம்பி அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக முன்கூட்டியே பயணச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அது தெரிவித்துள்ளது.








