பகாங் மாநிலம், கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள ஸ்கை கேசினோவில், துணைப் போலீஸ் அதிகாரியைத் தாக்கி சூதாட்ட இயந்திரங்களைச் சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெந்தோங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அஸ்மி மாஹ்மூட் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது பணியில் இருந்த 32 வயது துணைப் போலீஸ் அதிகாரி, சந்தேக நபரைக் கட்டுப்படுத்தி நிலைமையை அமைதிப்படுத்த முயன்றபோது, அவர் அதிகாரியின் வாயில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் அதிகாரியின் இரண்டு பற்கள் உடைந்தன.
பின்னர் அவர் பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அஸ்மி மாஹ்மூட் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கெந்திங் சூதாட்ட விடுதிக்கு 85 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதோடு, கைகலப்பில் ஈடுபட்ட அந்த நபருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








