பகாங் மாநிலம், காராக், பெந்தோங் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள காகித ஆலையில், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நேற்று இரவு இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெந்தோங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அஸ்மி மாஹ்மூட் தெரிவித்துள்ளார்.
32 வயதான சைஃபுல்நிஸாம் மிஸ்காம் என்ற அந்தத் தொழிலாளர் இயந்திரத்துக்குள் சிக்கி மயக்கமடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








