Oct 29, 2026
Thisaigal NewsYouTube

கைது செய்யப்பட்ட 2,097 போலீசாரின் நிலையை வெளியிட வேண்டும் - லிம் லிப் எங் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைது செய்யப்பட்ட 2,097 போலீசாரின் நிலையை வெளியிட வேண்டும் - லிம் லிப் எங் வலியுறுத்து

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 2,097 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விரிவான விளக்கத்தை சட்டத்துறைத் தலைவர் டுசுக்கி மொக்தார் வெளியிட வேண்டும் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவர்களில் எத்தனை பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்? அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்ற விவரங்களையும் வெளியிடுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் 1,551 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலும், 64 பேர் கொள்ளைச் சம்பவங்களிலும், 482 பேர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை போலீஸ் படையின் நம்பகத்தன்மைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட லிம், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய போலீசாரே குற்றங்களில் ஈடுபடுவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி காஜாங்கின் கண்ட்ரி ஹைட்ஸ் பகுதியில் சீன நாட்டவர்களிடமிருந்து சுமார் லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கிரிப்டோகரன்சியைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் 12 போலீசார் மீதான விசாரணை எட்டு மாதங்களுக்கும் மேலாகியும் தொடர்வது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →