கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பெய்த இரண்டு மணி நேர இடியுடன் கூடிய கனமழையைத் தொடர்ந்து, பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பூச்சோங் உத்தாமாவில் உள்ள ஜாலான் தாமான் தாசெக் பிரிமா Jalan பகுதியில் சாலையில் வெள்ளநீர் சூழ்ந்ததால் கார் ஒன்று சிக்கிக் கொண்டது.
சைபர்ஜெயாவில் பெர்சியாரான் சிப்பாங் சாலையில் சைபர் 10 அருகிலும், ஷா ஆலம் செக்ஷன் 7இல் ஐ-சிட்டி அருகிலுள்ள ஜாலான் கெலுலி 1C பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டது. ஐ-சிட்டி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஷா ஆலம் மாநகர் மன்றும் கூறுகையில், சுங்கை ராசா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, துகு கெரிஸ் அருகே ஆறு நிரம்பியதால் வெள்ளம் தீவிரமடைந்தது. வெள்ளப் பாதிப்பைக் குறைக்க வடிகால் அமைப்பை மேம்படுத்துதல், நீர்வரத்து மற்றும் வெளியேற்றப் பகுதிகளில் தடுப்பு வாயில்கள் அமைத்தல், வழக்கமான பராமரிப்பைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.








