Oct 28, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மூன்று முறியடிப்பு – 394 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மூன்று முறியடிப்பு – 394 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று கும்பல்களை போலீசார் முறியடித்து, 21 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 393.965 கிலோ போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அக்டோபர் 19 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஒன்பது சோதனைகளில், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 17 பேர் உள்ளூர்வாசிகள்; ஆறு பேர் வெளிநாட்டினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 13 லட்சம் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறுகையில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டறிய விசாரணை தொடர்வதாகவும், மேலும் கைதுகள் இடம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →