கிள்ளான் மேற்கு துறைமுக மாற்றுப்பாதையில் இன்று காலை 4 வீல் டிரைவ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
அவசரப் பாதையில் பயணித்த 4 வீல் டிரைவ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த டிரெய்லர் லாரி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது ஏறியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிள்ளான் தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்ததாகத் தெரிவித்தார்.








