Oct 28, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் இளவரசரின் உதவியாளர் எனக் கூறி மோசடி – 9.6 லட்சம் ரிங்கிட் பறித்தவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் இளவரசரின் உதவியாளர் எனக் கூறி மோசடி – 9.6 லட்சம் ரிங்கிட் பறித்தவர் கைது

சிலாங்கூர் இளவரசரின் தனிப்பட்ட உதவியாளர் என ஆள்மாறாட்டம் செய்து, வீடுகள் மற்றும் வாகனங்கள் வாங்கும் பரிவர்த்தனைகள் மூலம் 9 லட்சத்து 60 ஆயிரத்து 020 ரிங்கிட் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 40 வயதைக் கடந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோகூர் பாருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை 5 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார். அக்டோபர் 13ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்த அந்த நபருக்கும் சிலாங்கூர் அரச குடும்பத்துக்கும் அரண்மனை ஊழியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் நடந்த மோசடிகளுடன் அந்த நபருக்குத் தொடர்பு இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள மற்ற சந்தேக நபர்களைக் கண்டறிய புக்கிட் அமானுடன் இணைந்து போலீசார் செயல்படுவதாகவும் ஷாஸெலி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →