Oct 29, 2026
Thisaigal NewsYouTube

வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த ராணுவம் முடிவு - இராணுவ வீரர்கள் அதிருப்தி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த ராணுவம் முடிவு - இராணுவ வீரர்கள் அதிருப்தி

மலேசிய ஆயுதப்படைகளின் வர்த்தகப் பிரிவான பெர்னாமா (Pernama) நடத்தும் சுமார் 80 விற்பனை நிலையங்களிலும், இருப்பில் உள்ள பீர் தீர்ந்தவுடன் விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பீர் கொள்முதல் ஆர்டர்களையும் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை முழுமையாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய விதிமுறைகளின்படி, முஸ்லிம் அல்லாத ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மாதத்திற்கு 48 கேன்கள் அல்லது பாட்டில்கள் கொண்ட இரண்டு பெட்டிகள் வரை பீர் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சாதாரண கடைகளைவிட பெர்னாமாவில் பீர் விலை சுமார் 60% குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முடிவுக்கான காரணம் குறித்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் இந்த முடிவை அறிந்து இராணுவ வீரர்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →