Oct 29, 2026
Thisaigal NewsYouTube

தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் குழு அமைக்க அரசு தயார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் குழு அமைக்க அரசு தயார்

தேர்தல்களின்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், மக்களைத் தவறாக வழிநடத்தும் போலியான தகவல்கள் பரப்பப்படுவதையும் தடுக்க, சிறப்புப் பணிக்குழு அமைக்கும் யோசனையைப் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவைத் தாம் முன்வைக்கவிருப்பதாக, இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்படும் படங்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுப்பப்பட்டது.

தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து உரிய கொள்கைகளையும் பாதுகாப்பான தொழில்நுட்பத் தளங்களையும் உருவாக்க வேண்டியிருப்பதாகவும், செயற்கை நுண்ணறிவு நிர்வாகச் சட்டம் மூலம் அதன் பயன்பாட்டில் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து, பொறுப்புகளை வரையறுத்து, பாதிப்புகளைத் தடுப்பதற்கான சட்ட அடிப்படையை உருவாக்க முடியும் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →