Oct 29, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் குற்றங்கள்: வெளிநாடுகளில் 1,588 மலேசியர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் குற்றங்கள்: வெளிநாடுகளில் 1,588 மலேசியர்கள் கைது

வெளிநாடுகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இந்த ஆண்டு இதுவரை 1,588 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட 3,322 மலேசியர்களில் இது சுமார் 48 விழுக்காடாகும்.

2024ஆம் ஆண்டு 1,181 மலேசியர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,303ஆகவும், இந்த ஆண்டு 1,588ஆகவும் அதிகரித்துள்ளது என்று வெளியுறவுத் துணை அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சௌனி இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அதிகபட்சமாக இந்தோனேசியாவில் 381 மலேசியர்களும், சீனாவில் 380 பேரும், சிங்கப்பூரில் 310 பேரும், தாய்லாந்தில் 102 பேரும், ஜப்பானில் 72 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 40 நாடுகளில் மலேசியர்கள் இத்தகைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், மாற்றியமைக்கப்பட்ட பயணப் பைகள் மற்றும் காலணிகளில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் செல்லும் உத்திகளைக் கையாள்வதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்ட எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது குறித்த கவலையையும் வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →