Oct 29, 2026
Thisaigal NewsYouTube

பாடாங் செராயில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை, அன்பளிப்பு நிகழ்ச்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாடாங் செராயில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை, அன்பளிப்பு நிகழ்ச்சி

கெடா, பாடாங் செராயில் வரும் சனிக்கிழமை, அக்டோபர் 31ஆம் தேதி, ஜூவாலான் ரஹ்மா மடானி சிறப்பு விற்பனை மற்றும் ‘சந்துனான் காசே தீபாவளி’ தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் மக்கள் சேவை மையத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

இதில், பிற்பகல் 3 மணி முதல் அத்தியாவசியப் பொருட்கள் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படும். மேலும், இந்தியப் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

குஸ்கோப், தெக்குன் நேஷனல், ஐசியு ஜேபிஎம், மித்ரா ஆகிய அமைப்புகளின் உதவித் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெறும். பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →