Oct 29, 2026
Thisaigal NewsYouTube

உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை – ரமணன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை – ரமணன்

மலேசிய வேலைச் சந்தையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் மனிதவள அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப, முதலாளிகள் மைஃபுயூச்சர்ஜாப்ஸ் இணையவழி வேலை வாய்ப்புத் தளத்தின் மூலம் உள்ளூர் தொழிலாளர்களை முதலில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றார்.

2027 ஜூன் முதல் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும், 50 மில்லியன் ரிங்கிட்டுக்குக் குறைவான வருவாய் கொண்ட சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த உயர்வு கட்டங் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையவழிப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச வருமானக் கணக்கீட்டு முறையும் பாதுகாப்புத் தரநிலைகளும் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →