Oct 30, 2026
Thisaigal NewsYouTube

பெட்டாலிங் ஜெயாவில் பயங்கரம்: இளம் பெண் மீது முன்னாள் காதலன் ஆசீட் வீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்டாலிங் ஜெயாவில் பயங்கரம்: இளம் பெண் மீது முன்னாள் காதலன் ஆசீட் வீச்சு

பெட்டாலிங் ஜெயாவில், காதல் உறவு முறிந்ததைத் தொடர்ந்து முன்னாள் காதலன் எனக் கருதப்படும் வெளிநாட்டவர் ஒருவர் திரவப் பொருளை வீசியதில், 20 வயதுகளில் உள்ள இளம்பெண் ஒருவர் ரசாயனக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, காலை சுமார் 10 மணியளவில், உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டதையடுத்து, குற்றவியல் சட்டம் பிரிவு 325-ன் கீழ் கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக விசாரணை நடைபெற்று வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஷாம்சுடின் மாமாட் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் வெளிநாட்டவர்கள் என்றும், இருவரும் காதல் உறவில் இருந்ததாக நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், காதல் உறவு முறிந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிட் எனச் சந்தேகிக்கப்படும் திரவம் வீசப்பட்டதில் காயமடைந்த இளம்பெண், கோலாலம்பூர் பல்கலைக்கழக மருத்துவ மையமான யுஎம்எம்சியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்குப் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →