Oct 30, 2026
Thisaigal NewsYouTube

அஸாம் பாக்கியின் பங்குடைமை விசாரணை அறிக்கையை வெளியிட அரசு தயார்: அஸாலினா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஸாம் பாக்கியின் பங்குடைமை விசாரணை அறிக்கையை வெளியிட அரசு தயார்: அஸாலினா

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்குடைமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புக் குழுவின் முழு அறிக்கையையும் வெளியிட அரசாங்கம் தயாராக இருப்பதாக, சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனிநபர் தரவுப் பாதுகாப்பு, விசாரணை ஆவணங்களின் ரகசியத்தன்மை, சொத்து அறிவிப்புப் பதிவுகள் உள்ளிட்ட சட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படும் என்றார்.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தனது விசாரணையைச் சுயமாகவும், வெளிப்படையாகவும், தொழில்முறையாகவும் நிறைவு செய்து, அது கண்டறிந்தவைகளை அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டால் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலுவலகம் அது குறித்து அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →