கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
சிறார்கள் பிரச்சினைகள் குறித்த புகாரளிக்க சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படும் என்று சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் சிறார் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக இந்தச் சிறப்பு அகப்பக்கம் பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சிறப்புப் பக்கம் இவ்வாண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் விளக்கினார்.








