கோலாலம்பூர், டிசம்பர்.03-
முதியவர் ஒருவர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 19 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
77 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் அடுக்குமாடி வீட்டின் கீழ் தளத்தில் பாதுகாவலர் சாவடிக்குப் பின்புறம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த முதியவர் 19 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.








