Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ரவூப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி பலி
தற்போதைய செய்திகள்

ரவூப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி பலி

Share:

ரவூப், பிப்ரவரி.26-

ரவூப், கம்போங் பாமா கூலாட் என்ற பகுதியில், வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி மாண்டனர்.

இன்று அதிகாலை 3.35 மணியளவில் இச்சம்பவம் குறித்து, தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக, ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தீயை அணைத்த பிறகே, அவ்வீட்டில் இருந்த 5 சடலங்களும், கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

56 வயதான Mohd Awi Muhammad, 44 வயதான அவரது மனைவி Zaleha Adam மற்றும் அவரது பிள்ளைகளான 17 வயது Ruby Adira Batrisya Mohd Alawi, 14 வயதான Ruby Adlina Banin மற்றும் 10 வயதான Ruby Azyan Barizah ஆகிய 5 பேரும் தீயில் கருகி மாண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த நேரத்தில் இத்தம்பதியினரின் மற்ற இரு குழந்தைகள் வீட்டில் இல்லாத காரணத்தால், அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலங்கள் ரவூப் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

மேலும், இவ்விபத்தில் அவ்வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானதோடு, 3 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலானது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்