காஜாங், தாமன் இம்பியான் இந்தா பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயணப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில், பெண் சடலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசிப்பவர்கள், வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, நேற்று மாலை 7 மணியளவில் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவ்வீட்டை சோதனையிட்டபோது, பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலத்தை கண்டறிந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








