ஷா ஆலமில் நேற்று சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை நடத்திய 'ஓப் செர்காப்' சோதனையில், போலி பயண ஆவணங்கள் மற்றும் போலி வேலை அனுமதி ஒட்டுச்சீட்டுகளான PLKS-ஐத் தயாரித்த கும்பலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நடவடிக்கையில், முக்கிய சந்தேகநபரான இந்திய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை துணை இயக்குநர் குஸைரி காமருடின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா, வங்காள தேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 12 வெளிநாட்டினர்கள் பிடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கும்பலானது, வெளிநாட்டவர்களை, கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான நிலையம் வழியாக நாட்டிற்க்குள் அழைத்து வந்து, கிள்ளானில் உள்ள மறைவிடத்தில் 1–2 வாரங்கள் தங்க வைத்து, போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது கும்பலின் முழு வலையமைப்பை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.








