Jul 18, 2026
Thisaigal NewsYouTube
தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

Share:

கிளந்தான் மாநிலம் தும்பாட், கம்பங் புனோஹான் பகுதியில், வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிதான் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அரிய வகை சிவப்பு நிறக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையில், 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து அரிய வகை சிவப்பு நிறக் கழுகு, 4 ருவாக்-ருவாக் பறவைகள், ஓர் ஆந்தை, முசாங் பாண்டான் என்றழைக்கப்படும் நரிகள் இரண்டு மற்றும் 5 கூண்டுகள் உள்ளிட்ட மொத்தம் 48 ஆயிரத்து 500 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட விலங்குகளை வளர்ப்பதற்கான முறையான உரிமம் அல்லது அனுமதிப்பத்திரம் இல்லாததால், சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கானது, 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 60-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News