Oct 16, 2026
Thisaigal NewsYouTube

3 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது

டிச.5-

பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமியை தலைவராக கொண்டு செயல்பட்ட பினாங்கு அறப்பணி வாரியம், 2017 ஆம் ஆண்டு தைப்பூச விழாவில் வெள்ளோட்டம் விடப்பட்ட தங்கத் தேர் கொள்முதலில் அந்த அறவாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுமார் 3 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் அந்த முன்னாள் நிர்வாக இயக்குநர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. அவர் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு அணைத்தின் தடுப்புக்காவலில் இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ்டவுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ள சந்தேகப்பேர்வழிகளில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். ராமச்சந்திரனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

70 வயதான டத்தோ ராமச்சந்திரன், தங்க தேர் கொள்முதல் தொடர்பாக SPRM விசாரணைக்கு உதவும் வகையில் அவர் கைது செய்யப்பட்டு, 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →