Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

Share:

நாட்டின் கல்வித்துறையின் முக்கியத் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களின் உடல்நலம், மனநலம், பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நலன்சார்ந்த அம்சங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மலாயா தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் சிலாங்கூரில் பெண் ஆசிரியை ஒருவர் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிரியர்களுக்குத் தேவையான உளவியல் ஆதரவை வழங்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் அதிகப்படியான பணிச் சுமையின்றி நிம்மதியாகப் பணியாற்ற ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்று சங்கத்தின் தேசியத் தலைவர் எம். அர்ஜுனன் முருகையா கேட்டுக் கொண்டார்.

மேலும், ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதோடு, தமிழ்ப்பள்ளிகளின் 'ஆசிரியர் நலன் கண்காணிப்பு கட்டமைப்பை' உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர்களின் மன அமைதியே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்