Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

Share:

மாணவர்கள் பயிலும் பள்ளி எதுவாக இருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான ஏதுவான கற்றல் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

இன்று ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாமில் நடைபெற்ற SJKC Eco Grandeur பள்ளிக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பள்ளிப் பாடத் திட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக இந்த ஏதுவான கற்றல் சூழல் விளங்கும் என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் புதிய பள்ளிகளின் கட்டுமான அனுமதி அதிகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 38 புதிய பள்ளிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சுமார் 18 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் இப்பள்ளியில் தடையற்ற நடமாட்டத்திற்கான பிரத்தியேக சாய்தள அமைப்பு உட்பட ஆசியாவிலேயே முதன்முறையாகப் பல நவீனப் பாதுகாப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்