Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில்  கைது
தற்போதைய செய்திகள்

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

Share:

சபாவைச் சேர்ந்த மூன்று மலேசியப் பெண்கள், போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை மலேசியப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

30 முதல் 39 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்கள் கோத்தா கினபாலுவிலிருந்து ஜகார்த்தா வந்தடைந்த போது, அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த இந்தோனேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைச் சோதனையிட்டனர். அவர்களது உடமைகள், ஆடைகள் மற்றும் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோகெயின், எக்ஸ்டசி மற்றும் கெத்தமின் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

கைதானவர்களில் இருவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவு குறைவாக இருப்பதால், அது சுய பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படுவதாக டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்