ஈப்போ, ஆகஸ்ட்.28-
பேரா மாநில போலீசார் இவ்வாண்டில் 15.7 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர் என்று மாநில போலீஸ் துணைத்த தலைவர் ஏசிபி அஸ்லின் சஃபாரி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வரை மேற்கண்ட மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் பெரும்பாலானவை ஷாபு, கெத்தாமின் வகையைச் சேர்ந்ததாகும். இதன் வழி 13 ஆயிரத்து 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இன்று வியாழக்கிழமை ஈப்போவில் உள்ள பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற் ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி அஸ்லின் சஃபாரி இதனைத் தெரிவித்தார்.








