Aug 27, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அமைச்சர் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு

Share:

முன்னாள் அமைச்சர் ஒருவர், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வெளியிட்ட ஊடக அழைப்பின் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பணியாற்றியவர் என நம்பப்படும் இந்த முன்னாள் அமைச்சர், எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ் குற்றம் சாட்டப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்சம் கேட்பது, பெறுவது, வழங்குவது, உறுதியளிப்பது அல்லது வழங்க முன்வருவது ஆகியவற்றை குற்றமாகக் கருதும் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனினும், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் யார் என்பது உள்ளிட்ட வழக்கின் கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related News