Sep 7, 2026
Thisaigal NewsYouTube
நேபாள வெள்ளம்: மோகனதாஸ் தலைமையிலான 39 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

நேபாள வெள்ளம்: மோகனதாஸ் தலைமையிலான 39 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

Share:

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் திடீர் கனமழை மற்றும் வெள்ளம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய எவரெஸ்ட் மலையேற்ற முன்னோடியான டத்தோ என். மோகனதாஸ் தலைமையிலான 39 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

56 பேர் கொண்ட இந்தக் குழுவில் 39 மலேசியர்கள், 4 சிங்கப்பூரர்கள் மற்றும் 3 கனடியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் தங்கள் பயணப் பாதையை பாதிக்கவில்லை என்றும், குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக யாத்திரையைத் தொடர்ந்து வருவதாக மோகனதாஸ் தெரிவித்தார்.

கைலாஷ் மலையைச் சுற்றி மேற்கொள்ளப்படும் புனித கைலாஷ் கோரா யாத்திரையின் மூன்று நாள் பயணத்தில் அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

நேபாள வெள்ளப் பேரிடரால் அச்சம் எழுந்த நிலையில், மோகனதாஸ் தலைமையிலான 39 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து