Aug 27, 2026
Thisaigal NewsYouTube
தோக்கியோ விமானம் தரையிறங்கியது... சக்கரப் பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்
தற்போதைய செய்திகள்

தோக்கியோ விமானம் தரையிறங்கியது... சக்கரப் பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்

Share:

தோக்கியோவில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையமான கே.எல்.ஐ.எ 2-க்கு வந்த விமானத்தின் சக்கரப் பகுதியில், அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

காலை 6.30 மணியளவில் விமானம் தரையிறங்கிய நிலையில், சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு சக்கரப் பகுதியைத் திறக்கச் சென்ற பொறியியல் ஊழியர்கள் அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர்.

சோதனையிட்டபோது, ஜீன்ஸ் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்த நிலையில் சடலம் கிடந்தது. உயிரிழந்தவர் ஆணா அல்லது பெண்ணா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

எனினும், அவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்றும், சடலம் 72 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்திருக்கலாம் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்து.

சடலத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், இறந்தவர் யார்? அவர் விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் எவ்வாறு சென்றார்? மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Related News