Aug 27, 2026
Thisaigal NewsYouTube
ஆயுள் தண்டனை அச்சுறுத்திய வழக்கில் மின்சாரத் தொழிலாளி விடுதலை
தற்போதைய செய்திகள்

ஆயுள் தண்டனை அச்சுறுத்திய வழக்கில் மின்சாரத் தொழிலாளி விடுதலை

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா செடியை வளர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மின்சாரத் தொழிலாளி ஒருவர், வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.

37 வயதான அஸ்ஸிசி அயூப் என்பவர் மீது, 253.4 கிராம் எடையுள்ள கஞ்சா செடியை வீட்டில் வளர்க்க அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், கிந்தா மாவட்டம், தாமான் டத்தோ லியோவ் யான் சிப், பெர்சியாரான் வீரா ஜெயா தீமோர் 36 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டில் 253.4 கிராம் எடையுள்ள கஞ்சா செடியை மற்றொருவர் பிளாஸ்டிக் பையில் நட்டு வளர்ப்பதற்கு அனுமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையுடன் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மாட் தார்மிஸி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தீர்ப்பைக் கேட்ட அஸ்ஸிசி அயூப், உணர்ச்சிவசப்பட்டு நீதிமன்றத்தில் கண்ணீர் சிந்தினார்.

Related News