கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தொடுத்துள்ள அவதூறு வழக்கு விசாரணை, புதிய நீதிபதி முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை நீதித்துறை ஆணையர் ஸாஹாரா ஹுசேன் முன்னிலையில் அடுத்த வாரம் நடைபெறும் என்று டத்தோ ஶ்ரீ அன்வாரின் வழக்கறிஞர் அலிஃப் பெஞ்சமின் சுஹைமி தெரிவித்தார்.
இவ்விவரம், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் பேராளர் மாநாட்டில், துன் மகாதீர், நாட்டின் பிரதமராக இருந்த போது, தனது குடும்பத்தினரைச் செல்வந்தர்களாக ஆக்கிக் கொள்வதற்குப் பணத்தை குவித்துக் கொண்டார் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் உரையாற்றியதாகக் கூறி, அவருக்கு எதிராக துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.








