கோலாலம்பூர், டிசம்பர்.04-
இந்தோனேசியா, சுமத்திராவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 5 மலேசியர்களில் மூவர் பாதுகாப்பாக உள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் 64 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க மேலும் இரு மலேசியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அது தெரிவித்துள்ளது.
ஓர் ஆணும் பெண்ணும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








