Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.15-

மலேசிய உடன்படிக்கை 1963-இன் கீழ் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு வருவாய் உரிமையை மதிக்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோத்தா கினபாலுவில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு என்பது இந்த உரிமையை எதிர்ப்பதற்கானது அல்ல, மாறாக முந்தைய தீர்ப்பில் உள்ள சில விளக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே என விளக்கமளித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அந்நிய முதலீடுகளின் பலன் அடிமட்ட மக்களையும் சென்றடைவதையும் உறுதிச் செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சபா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சமயக் கல்வி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட டிஜிட்டல் கல்வியை அறிமுகப்படுத்த 1.525 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு